தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற்குள் நேற்று மாலை இராணுவத்தினர் அத்துமீறி உள் நுழைந்து விபரங்களைத் திரட்டியுள்ளனர். யாழ்.நகரில் 3ம் குறுக்குத் தெருவிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற்குள், நேற்று மாலை ஐந்து மணியளவில் சிவிலுடையில் சென்ற இராணுவத்தினரே, கட்சி அலுவலகத்தில் புகுந்து விபரங்களை திரட்டிச் சென்றுள்ளனர். விபரங்கள் சேகரிப்பதாயின் பொலீசாரே வந்திருக்க வேண்டும் என்றும், இராணுவத்தினர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை தம்மை அச்சுறுத்தும் செயற்பாடு என்றும் கட்சித் தலைமை கருத்து வெளியிட்டுள்ளது.
சம்பவ வேளையில் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.


