Headlines News :
Home » » மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்தது: இங்கிலாந்து பெண் பரபரப்பு தகவல்

மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்தது: இங்கிலாந்து பெண் பரபரப்பு தகவல்

மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை இந்திய பெருங்கடல் பகுதியில் பார்த்ததாக இங்கிலாந்து பெண் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் கோலாம்பூரில் இருந்து சீனா கிளம்பிய MH 370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானது.
இதனையடுத்து அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்திய பெருங்கடலில் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் கடந்த மூன்று மாத காலமாக கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.
ஆனால் இங்கு கிடைக்கப்பட்ட பாகங்கள் விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதியானது.
இந்நிலையில் மாயமான விமானம் எரிந்ததை தான் பார்த்தாக இங்கிலாந்தை சேர்ந்த கேத்ரீன் டீ என்ற பெண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் என் கணவர் மார்க் ஹார்னும் விடுமுறையை கழிக்க சென்றோம். நாங்கள் கொச்சியில் இருந்து தாய்லாந்தில் உள்ள புகெட்டுக்கு படகில் சென்றோம்
அப்போது இந்திய பெருங்கடலை கடந்து செல்கையில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை நான் பார்த்தேன்.
ஆனால் அது வழக்கமான விமானத்தைவிட பெரிதாக இருந்தது. மேலும் அதிலிருந்து கரும்புகை வந்தது என கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கேத்ரீனும், அவரது கணவரும் விமானத்தை தேடும் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாயமான விமானம் சென்ற பாதையில் தான் அவர்களின் படகு சென்றுள்ளதால், தீப்பிடித்து எரிந்தது மாயமான மலேசிய விமானமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
Share this article :

Banner Ads

Friends Site