Headlines News :
Home » » அவுஸ்திரேலிய தற் கொலையில் லியோவின் காரணம் வெளியானது..

அவுஸ்திரேலிய தற் கொலையில் லியோவின் காரணம் வெளியானது..

நாடு கடத்தக் கூடும் என்ற அச்சத்திலேயெ லியோ சீமான்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படவிருந்த லியோன் சீமான்பிள்ளை தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தீக்குளித்தார்.
கடுமையான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீமான்பிள்ளை கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 29 வயதான சீமான்பிள்ளை கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்தார்.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடும் மன உலைச்சலினால் சீமான்பிள்ளை பாதிக்கப்பட்டிரு;தார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு நாடு கடத்த்தப்பட்டாலே புலி ஆதரவாளர் என அடையாள முத்திரை குத்தப்படும் என சீமான்பிள்ளை நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டால் படையினர் சித்திரவதை செய்யக்கூடும் சில வேளைகளில் கொலை செய்யக் கூடுமென சீமான்பிள்ளை அஞ்சியதாக, மரணப்படுகையில் இருந்த போது அருகில் இருந்த இலங்கை நண்பர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த சீமான்பிள்ளை இறுதி ஆசையாக சில உடல் உறுப்புக்களை தானமாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

Banner Ads

Friends Site