விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


