மாயமான மலேசிய விமானம் அமெரிக்க ராணுவ பயிற்சியின்போது சுட்டு  வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.  கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன்  மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு  புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. மாயமான  அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது.  ஆனால், விபத்துக்கான காரணமோ அல்லது விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்களோ  இதுவரை சிக்கவில்லை. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில்  விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்-21'  என்ற நீர்மூழ்கி ‘ரோபோ'வை கொண்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால்,  அதிலும் பலன் இல்லை.  மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் அல்கொய்தா ஆதரவு  தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.  இந்நிலையில், மலேசிய விமானம் மாயமானது குறித்த தகவலால் அதில் பயணம் செய்த  பயணிகளின் உறவினர்கள் எத்தகைய கோபத்திற்கு ஆளானார்கள் என்பது குறித்து  புத்தகம் ஓன்று வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
விமானம் எம்.எச்.370: மர்மம்... 
 லண்டனை சேர்ந்த ஆங்கிலோ அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நைஜல்  கவ்தோர்னெ ஆகியோரின் எழுத்தில் உருவான "விமானம் MH370: மர்மம்" எனப்  பெயரிடப்பட்ட அந்த புத்தகம் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளதாக  இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகளின் உறவினர்கள்.... 
 அந்தப் புத்தகத்தில் மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன  நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கிட்டத்தட்ட  நிச்சயமாக எதுவும் தெரிந்திருக்காது என்று கவ்தோர்னெ தெரிவித்துள்ளார்
மூடி மறைக்கப் பட்ட உண்மை... 
 மேலும், தாய்லாந்து - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியின் போது விமானம்  சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் பின்னர் இந்த தகவல் மூடிமறைக்கப்பட்டுள்ளது  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 எண்ணெய்  தொழிலாளியின் சாட்சியம்....
 அதேபோல், நியூசிலாந்தை சேர்ந்த ஆயில் ரிக் தொழிலாளி மைக் மெக்கே நேரடியாக  நடந்த சம்பவத்தை பார்த்ததாக குறிப்பிட்டு இந்த புத்தகத்தில் நைஜல் புதிய  தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு  அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் பயிற்சி...  விமானம் மாயமானபோது தெற்கு சீன கடலில் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா,  ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மற்ற பணியாளர்கள் இணைந்து போர் பயற்சி  நடத்தினர். அப்போது விமானம் ஒன்று எரிந்து தாய்லாந்து வளைகுடா பகுதியில்  விழுந்ததை மைக் மெக்கே பார்த்துள்ளார் என்று இரண்டையும் ஒப்பிட்டு  கவ்தோர்னெ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பாராத விதமாக... 
 பயிற்சியின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் சுட்டு  வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


