Headlines News :
Home » » பிரியங்கா விமர்சனத்திற்கு நரேந்திரமோடி பதில்

பிரியங்கா விமர்சனத்திற்கு நரேந்திரமோடி பதில்

தரம் தாழ்ந்த அரசியல்வாதி என கூறிய பிரியங்கா காந்திக்கு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் தான், பிரியங்கா காந்தி அவ்வாறு கூறுவதாக விமர்சித்தார். ஆனால், இந்த தரம் தாழ்ந்த அரசியலைச் சேர்ந்தவர்தான், 60 ஆண்டுகால தவறான ஆட்சியிடமிருந்து நாட்டை மீட்டு, மக்களின் கண்ணீரை துடைக்க இருப்பதாக மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, தரம் தாழ்ந்த அரசியலில் நரேந்திரமோடி ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். முன்னதாக பிரியங்கா காந்தி பலமுறை விமர்சித்த போதும் அதனை கண்டுகொள்ளாத நரேந்திர மோடி, தற்போது பிரியங்காவுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
Share this article :

Banner Ads

Friends Site