மனித உரிமை மீறல்களை திசை திருப்பும் இலங்கை: சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை திசை திருப்பும் வகையில், அந்நாட்டு ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுசரிக்க இயலாதபடி, ராஜபக்சே அரசு பல்வேறு வகையிலும் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.


