தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்த்தேச தொழிலாளர் எழுச்சி நாள் இன்று நெல்லியடி சாமியன் அரசடி வைரவ கோவில் முன்றலில் இடம் பெற்றது.
நிகழ்விற்கு முன்பாக ஊர்வலம் இடம் பெற்றது. ஊர்வலத்தின் போது இராணுவமே வெளியேறு, அரசியல் கைதிகளை விடுதலை செய், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மீதான அடக்கு முறைகளை நிறுத்து, தாயகம்,தேசியம்,சுயநிர்ணயத்தை அங்கிகரி, சர்வதேச கண்காணிப்பில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும், இன அழிப்பிற்கு பக்க சார்பற்ற விசாரனை வேண்டும் முதலான விடயங்கள் வலியுறுத்தபட்டன.
இந் நிகழ்வில் திருமதி. குமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன், வல்வெட்டி துறை நகர சபை தலைவர் ஆனந்தராஜா, விரிவுரையாளர்கலாநிதி.சிதம்பரநாதன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட கட்சியின் மாவட்ட உப.தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.




