Headlines News :
Home » » தாயைப் பூஸாவில் பார்த்தார் விபூசிகா

தாயைப் பூஸாவில் பார்த்தார் விபூசிகா

பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரியாகிய தனது தாயை பார்ப்பதற்காக அவரது மகளான பாலேந்திரன் விபூசிகா கரைச்சி பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி விஜயகுமாரி சுரேஸுடன் நேற்று திங்கட்கிழமை (05) சென்றார்.

விபூசிகா தனது தாயாரினைப் பார்ப்பதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கடந்த புதன்கிழமை (30)  கோரியிருந்தார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் மார்ச் 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து, சந்தேகநபர் ஒருவர் ஒளிந்திருந்ததாகக் கூறப்படும் வீட்டிலிருந்து காணாமற்போன இளைஞர் ஒருவரின் தாயும் சகோதரியும் அதேதினத்தில் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

தொடர்ந்து இவர்கள் இருவரும், மார்ச் 14ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 

இதன் பிரகாரம் தாயாரான பாலேந்திரன் ஜெயக்குமாரிக்கு (50) 3 மாதகாலம் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மகள் விபூசிகா மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (30) விபூசிகாவின் வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தாயாரினைப் பார்ப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினை நீதவான் ஏற்றுக்கொண்டு அனுமதியினை வழங்கினார். 

கரைச்சிப் பிரதேச நன்னடத்தை அதிகாரி இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு இன்று (05) சிறுமியினை அவரது தாயார் சந்திப்பதற்காக அழைத்துச் செல்கின்றார்.
Share this article :

Banner Ads

Friends Site