Headlines News :
Home » » ரவிகரன் அவர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் சமூகமளிக்கும் படி உத்தரவு

ரவிகரன் அவர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் சமூகமளிக்கும் படி உத்தரவு

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களை நாளை(20.05.2014) சமூகமளிக்கும் படி முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

இன்று மாலை 5 மணியளவில் நீதிமன்றத்தில் இருந்து வந்த அறிவித்தலின் படி நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றத்தின் முன்பாக தவறாது சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.


மேற்படி அறிவித்தலை அளிக்க வந்தவரிடம் நீதிமன்ற அழைப்பிற்கான காரணம் என்ன? என்று வினவிய நிலையில் அது தொடர்பில் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் மேற்படி அறிவித்தலை மாத்திரம் கொடுத்துவிடும் படி தெரிவித்ததாகவும் அவர் பதிலளித்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

Banner Ads

Friends Site