Headlines News :
Home » » யாழ்.குடாநாட்டில் மீண்டும் இராணுவ பதிவு ஆரம்பம்

யாழ்.குடாநாட்டில் மீண்டும் இராணுவ பதிவு ஆரம்பம்

யாழ்.குடாநாட்டில் மீண்டும் பதிவு நடவடிக்கைகளை படைத்தரப்பு அமுல்படுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக செல்லும் படையினர் இத்தகைய பதிவுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுமார் 57 கேள்விகள் அடங்கிய குறிப்புக்களுடன் செல்லும் அவர்கள் அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கல்வித்தகமை மற்றும் யுத்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு ஆகியவற்றுடன் புலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் பற்றி துருவி துருவி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இளவயதினர் தொடர்பான விபரங்கள் பற்றி கேட்டறிவதுடன் அவர்கள் பற்றியும் பதிவுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய காலங்களில் மீண்டும் புதிதாக படைத்தளங்கள் படையினரால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அம்முகாம்களினூடாக மீண்டும் இராணுவ நிர்வாக கட்டமைப்புக்களை முன்னெடுக்க ஏதுவாகவே இத்தகைய தகவல் திரட்டுக்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது. குடாநாட்டில் படைமுகாம்கள் இழுத்து மூடப்படுகின்றது படையினரது பிரசன்னம் குறைக்கப்படுகின்றது என்ற பிரச்சாரங்களை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து வரும் அரசு மறுபுறம் இராணுவ நிர்வாகமொன்றை நிழலாக முன்னெடுக்கின்றமை இதன் மூலம் உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

Banner Ads

Friends Site