Headlines News :
Home » » ரவிகரன் மீது பொலிஸார் சோடித்த வழக்கு தள்ளுபடி

ரவிகரன் மீது பொலிஸார் சோடித்த வழக்கு தள்ளுபடி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மீது பொலிஸார் சோடித்த வழக்கினை  முல்லைத்தீவு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .
முல்லைத்தீவு  நீதிமன்ற வளாகத்தின் முன் இன்று காலை ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும். அது நீதிமன்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய செயலாகையால் அதை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் மேலும் இவ்வாறான தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ரவிகரன் திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆயராகுமாறு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீதி மன்றத்தில் ஆயராகிய போது.
 
ரவிகரன் சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் திரு.பரஞ்சோதி அவர் மீது முன்வைக்கப்பட்ட இவ்வாறான குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லாததால் மேற்படி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதால்  ரவிகரன் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்த சம்பவம் தொடர்பில் ரவிகரனிடம் கேட்டபோது-
 
காணாமல் போனோர் எம்முடைய உறவுகள். அவர்களுக்காக ஆர்ப்பாட்டங்களும் மக்கள் எழுச்சிகளும் நடாத்தப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்ட அவர் ஆனால் இன்று இந்த விடயம் தொடர்பில் எதுவித திட்டமும் தான் யாரிடமும் முன்வைக்கவில்லை எனவும் இன்று ஆர்ப்பாட்டம் என் தலைமையில் நடைபெறவிருக்கிறது என்று பொலிசாரால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டானது எதுவித ஆதர பின்னணிகளும் இன்றி பொய்யாக சோடிக்கப்பட்டதென்று அவர் சாடினார்.
 
இதேவேளை  முல்லைத்தீவு பொலிசாரால் ரவிகரன் மீது தொடரப்பட்ட வழக்கு சோடிக்கப்பட்டதென இனங்காணப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Share this article :

Banner Ads

Friends Site