Headlines News :
Home » » மற்றுமொருவரும் அடையாளம் காணப்பட்டார்! போராளி பிரதீபனினதென சகோதரி அடையாளப்படுத்தினார்

மற்றுமொருவரும் அடையாளம் காணப்பட்டார்! போராளி பிரதீபனினதென சகோதரி அடையாளப்படுத்தினார்

இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் அவரது சகோதரியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.இந்த படத்தில் மிகவும் ஆழமான பகுதியில் மேலாடையின்றி கைகள் கட்டப்படாத நிலையில் இளைஞர் ஒருவர் காணப்படுகிறார். அந்த இளைஞர் பருத்தித்துறையைச் சேர்ந்த பேரம்பலநாதன் பிரதீபன் (வயது – 35) என்பவர் என்று அவரது சகோதரி; அடையாளப்படுத்தியுள்ளார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலூடாக இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் வழியில் எமது சகோதரன் காணாமல்போயிருந்தார். இது குறித்து நாம் மனித உரிமை ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், காணாமற்போனோரைக் கண்டறியும் குழு, காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் மன்னார் ஆயர் குழு என்பவற்றில் முறைப்பாடுகளைச் செய்திருக்கிறோம். அத்துடன் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில் வெளியான புகைப்படம் ஒன்றிலும் எமது சகோதரன் இருக்கிறார். அது தொடர்பிலும் முறைப்பாடுகளில் குறிப்பிட்டிருக்கிறோம்.- என்று பிரதீபனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் புகைப் படத்திலிருந்து பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என்று உறவினர்கள் அடையாளம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Banner Ads

Friends Site