Headlines News :
Home » » ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து சேலத்தில் இளைஞன் ஒருவன் தீக்குளிக்க முயற்சி

ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து சேலத்தில் இளைஞன் ஒருவன் தீக்குளிக்க முயற்சி

மோடி பதவியேற்பு விழாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததையும், அவரின் வருகையைக் கண்டித்தும் சேலத்தில் இளைஞன் ஒருவன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இவ்வாறு தீக்குளிக்க முற்பட்டவர் கருப்பூரைச் சேர்ந்த 31 அகவையுடைய வெற்றிவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை (23-05-2014) சேலம் மாவட்டதின் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிதேவதை முன் வெற்றிவேல் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் பெரும் திரளாக வந்து மண்ணெண்ணைக் கொள்கலலைப் பறித்து அவரின் உயிரைக் காற்பாற்றியுள்ளார்கள். அதன்பின் வெற்றிவேலை பிடித்து சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினரின் விசாரணையின் போது, நான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வரக்கூடாது. அவர் இந்தியா வருவது என்னை போல் பலருக்கும் பிடிக்கவில்லை, என தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தீக்குளிக்க முயற்சித்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
Share this article :

Banner Ads

Friends Site