கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் கடந்த இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு வரை சேவையாற்றியுள்ளதாகவும்,
இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை,விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
