Headlines News :
Home » » புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை இதன் கிளைமக்ஸ் இனித்தான் ஆரம்பம் - சரவணை மைந்தன்

புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை இதன் கிளைமக்ஸ் இனித்தான் ஆரம்பம் - சரவணை மைந்தன்

புலிகளின் மீள்  உருவாக்கம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கு  பிரதேசத்தில் இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்திய  ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு தற்பொழுது  தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்தவித அச்சமும் இன்றி உலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டு ஈழத்திலேயே ஆதிக்க வெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சில தமிழ் தேசிய கொள்கைகளை இறுக பற்றி பிடித்து போராடும் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைக்க தொடங்கியுள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் இணைந்து நடத்தப்பட்ட புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை இதன் கிளைமக்ஸ் இனித்தான் ஆரம்பம்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் கடும் போக்கான,தேசிய பற்றான பாராளுமன்ற உறுப்பினர்களை பலியெடுக்கும் படலத்தை இந்தியாவின் ஆலோசனைப்படி இலங்கை அரசு முன்னெடுக்க ஆரம்பிக்கிறது இதன் வெளிப்பாடே  சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று விடுதலை புலி உறுப்பினர்களுக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

2009 மே மாதம் விடுதலைப்புலிகளின் செயற்ப்பாடுகள் தமிழீழத்தில் மௌனிக்கப்பட்டத்திலிருந்து  அடுத்து இடம்பெற்ற இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கு யாழ் மாவட்டத்தில் இருந்து அதிக வாக்குகளால் முன்னர் தெரிவு செய்யப்பட்ட தீவிரமான தமிழ் தேசிய பற்றுடன் உழைத்த விடுதலைப்புலிகளால் தெரிவு செய்யப்பட்ட முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இனங்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால்  வேட்ப்பாளர்களாக அறிவிக்கப்படவில்லை.

 இவர்கள் திரும்பவும் கூட்டமைப்பில் நின்றால் அவர்களால் தேசியம்,சுயநிர்ணயம் ,தாயகம் என்று விடாப்பிடியாக நிற்ப்பார்கள் எனவே அவர்களை கூட்டமைப்பு நிறுத்தக்கூடாது என இந்தியா விடாப்பிடியாக கட்டளை இட்டது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இந்தியாவின் ஆதரவுடன் நடந்த இந்திய இலங்கை  கூட்டு  களையெடுப்பு.

அதுபோல் இன்றும் இலங்கை மற்றும் இந்திய கூட்டு நடவடிக்கையில் மீண்டும் தேசிய செயற்பட்டாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலியெடுக்க புதிய திட்டத்துடன் நடவடிக்கை ஆரம்பிக்கபடுகிறது  

தற்பொழுது புலிகள் கதை கூறி அவர்களுடன் தொடர்ப்பு என்று சில தமிழ்தேசிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்து சிறையில் அடைக்க பெரும் திட்டத்தை நிறைவேற்ற தொடங்கியுள்ளார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள முக்கிய மக்கள் பிரதிநிதிகள் இதில் குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.

தங்களை குறிவைக்கிறார்கள் என்று அவர்கள் முன்னரே அறிந்தும் இருக்கிறார்கள் இதை அவர்கள் தங்களுடன் நெருங்கியவர்களுடன் பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதனை தடுப்பதாயின் அனைத்து தமிழ்மக்களும் தமிழக மக்களும் அந்த தமிழ் தேசிய மக்கள் பிரதிநிதிகளின் கைகளை பலப்படுத்த ஓரணியில் திரண்டு அவர்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
Share this article :

Banner Ads

Friends Site