Headlines News :
Home » » பிரித்தானியா மில்ற்றன்கீன்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !

பிரித்தானியா மில்ற்றன்கீன்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !

வர்த்தமானி தடைப்பட்டியல் ஊடாக புலம்பெயர் தமிழர் மக்கள் மீது பெரும் உளவியல்போரை சிறிலங்கா அரசு தொடுத்துள்ள நிலையில், இச்சாவலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் விழிப்புக்கும், விடுதலைக்கான உறுதிப்பாட்டுக்கும் பரித்தானியா மில்ற்றன்கீன்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை அவைத்தலைவரும் பகுதி மக்கள் பிரதிநிதியுமாகிய தில்லை நடராஜா அவர்கள் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்த கருதாடப்பட இருப்பதோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளது.

வரும் சனிக்கிழமை (19-04-2014) Conniburrow Boulevard Milton Keynes MK14 7 AJ எனும் இடத்தில் 2:00 மணிக்கு இப்பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுக்கவுள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா புறக்கணிப்பு தொடர்பிலான விழிப்பூட்டல் செய்திப்படங்கள்  தொடர்பில் இளையோர்களுக்கான சந்திப்பொன்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சினால் இந்நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 4:30 மணிக்கு நா.தமிழீழ அரசாங்கத்தின் பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.
Share this article :

Banner Ads

Friends Site