இராஜீவ்  கொலை வழக்கில் பொய் குற்றம் சுமத்தி   தண்டிக்கப்பட்ட ஏழு பேர் விடுதலை  குறித்த வழக்கில் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச  நீதிமன்றத் தலைமை நீதிபதி ப.சதாசிவம் அவர்கள் கூறியிருப்பது,
 
  ''நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது அல்ல . அரசியல் ரீதியான மோசமான விளைவுகள் இதனால் ஏற்படும்” 
 -என  தமிழினத்  துரோகி மு. கருணாநிதி கூறியுள்ளார்.
 
 இதன் உள்நோக்கம் என்ன?உள்குத்து அரசியல் செய்தே பழகிப்போன தமிழின துரோகி  கருணாநிதிக்கு,ஏழு  தமிழர்களை விடுதலை செய்வதில் விருப்பமில்லை.
  குறிப்பாக உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி அய்யா ப.சதாசிவம் அவர்கள்  மூன்று தமிழர்களை  தூக்கிலிருந்து விடுவித்து ,ஏழு தமிழர்களை மாநில அரசு  ஆயுள் தண்டனையிலிருந்தும் விடுவிக்கலாம் என்று கோடிட்டு காட்டிய  உடனேயே,தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா  தமிழக சட்ட சபையிலேயே உரத்த குரலில்  ஏழு தமிழர்களின் விடுதலையை அறிவித்தார்...இது தமிழின துரோகி கருணாநிதி  எதிர்பார்க்காத ஒன்று.
 ஆகவே தான் பொய் குற்றம்  சாட்டப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை ஆகக்கூடாது என்று துரோகி கருணாநிதி நினைக்கிறார்.
 அதற்காக தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையே மிரட்டும் வகையில் கருணாநிதி பேசியுள்ளார்.
 
 ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென கருணாநிதி முன்னர் பேசியதெல்லாம்  வெறும் அரசியல் நாடகம் தான் என்பது இப்போது நமக்கு தெளிவாக புரிகிறது.  தேர்தல் களத்திலே நீளிகண்ணிருடன் ஈழத்தமிழர்களுக்காக பரிந்து பேசும் தமிழின  துரோகி கருணாநிதிக்கு அப்பாவி தமிழர்களை காப்பற்றும்  பொறுப்பில்லையா?இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் தமிழர்களின்  விடுதலை உங்களுக்கு எந்த வகையில் பிரச்சனையாக உள்ளது ?அவர்களின்  விடுதலையால் உங்களின் குடும்பத்தாருக்கு ஏதேனும் சிக்கலா?இவ்வளவு நீங்கள்  பதட்டம் அடைய வேண்டிய காரணம் என்ன?ஏழு பேரின் வழக்கில் தீர்ப்பு வெளி  வருவதை விட,உங்களின்  கட்சியின் நலன் பெரிது என அறிக்கை விடுவது  அயோக்கியத்தனம் இல்லையா?
 
 உங்களுடைய தேர்தல் ஆதாயத்திற்காக அந்தத்  தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தை நிர்பந்தம்  செய்வதும்,மிரட்டுவதும்  நீதித் துறையை அவமதிக்கும் செயலாகும்.ஆகவே துரோகி  கருணாநிதியை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதுசெய்தாக வேண்டும் என் இந்திய  அரசுக்கு  தமிழர் நலம் பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
 
  குடும்பத்துக்காக அரசியல் செய்து தமிழர்களை ஏமாற்றும் கருணாநிதியே,ஒட்டு  மொத்த தமிழினமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஏழு தமிழர் விடுதலையை எதிர்ப்பதற்கு  நீ யார்?????
 எமது இனத்தை அழித்தொழிக்க சிங்கள-இந்திய அரசுகளுடன் கைகோர்த்து நின்ற கருணாநிதியே,
 உமது நாடகங்களை நிறுத்திகொள்.
 இல்லையென்றால் வீடு புகுந்து தமிழினம் அடிக்கும் நிலைவரும் என தமிழர் நலம் பேரியக்கம் எச்சரிக்கிறது.


