Headlines News :
Home » , » காங்கிரஸின் துரோக வரலாறு நூல் வெளியீடு

காங்கிரஸின் துரோக வரலாறு நூல் வெளியீடு


நேற்று 20 ஏப்ரல் 2014 மதியம் சேப்பாக்கம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்
"காங்கிரஸின் துரோக வரலாறு" என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க. இராசா ஸ்டாலின் எழுதியுள்ளார். இந்த நூல் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு முன் பரப்புரை செய்யப்பட உள்ளது.
இந்நூலின் சிறப்பு:
காங்கிரஸின் கடந்த இரு தசாப்த நிர்வாக, கொள்கை ரீதியான தவறுகளே அவர்களை புறக்கணிக்க காரணமாக தற்போது பரப்புரை செய்யப்படுகிறது.
ஆனால் இந்நூல் காங்கிரஸின் ஊழலும், மக்கள் விரோதமும் எவ்வாறு அடிப்படையான அமைப்பு ரீதியிலான கோளாறு என்பதை விவரிக்கிறது.
காங்கிரஸ் தொடங்கிய காரணம் முதல் அதன் தொடக்க கால தலைவர்கள் உட்பட ஊழலுக்கும், மக்கள் விரோத செயல்களுக்கும் எவ்வாறு திட்டமிட்டு அமைப்பு ரீதியாக அது ஒரு ஊழல்காடாக வளர்த்தெடுக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தி, காங்கிரஸின் இன்றைய தமிழர் விரோத நடவடிக்கைகள் தனி நபர்களின் தவறு அல்ல, மாறாக அதன் கட்டமைப்பின் பிரிக்க முடியாத மக்கள் விரோத போக்குகள் என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது.
"காங்கிரஸ் அடிப்படையில் ஒரு இந்திய சுதந்திர இயக்கம். அது சமீபகாலமாக தான் தவறான பாதையில் செல்கிறது" என்ற தவறான பிம்பத்தை உடைத்து அதன் ஊழலும், அராஜகமும் எல்லா காலங்களிலும் அதன் உயிர் நாடியான "வழிகாட்டு கொள்கைகளில்" வேரூன்றி நிற்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது.
இளம்வாக்காளர்கள் அதிகம் அறிமுகமாகும் நிலையில் அவர்களுக்கு காங்கிரஸ் குறித்த இத்தகைய விரிவானதொரு பார்வையை உருவாக்கி விழிப்புணர்வு உண்டாக்குவதை இந்நூல் நோக்கமாக கொண்டுள்ளது.
நன்றி
ஸ்டாலின், சூரியா
உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
98848 77487, 98409 92689



Share this article :

Banner Ads

Friends Site