கொழும்பு மகசின் சிறைச்சாலையில் மா்மான முறையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸ் வயது 42 இறுதி கிாிகைகள் எதிா் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு வடமராட்ச்சி புலோலியில் உள்ள அவராது வீட்டில் நடைபெறவுள்ளது. தமிழ் இனத்துக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த கோபிதாள் இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் தமிழ் உணா்வளா்கள் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு வடமாகணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளா் அவா் மேலும் தொிவிக்கையில் பிரித்தானியா தமிழ் பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் 2007 மாா்ச் மாதம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து புலிகளுக்கு நிதி சேகாித்தாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 
பின் 8வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்துப்பட்டுருந்தா். இந்நிலையில் இருதயநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் உாிய சிகிச்சை அளிக்கபடாமயினால் கடந்த 24 திகதி மகசின் சிறைச்சாயைில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். 
இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக விசராணை எதுவுமின்றி சிறைச்சாலையில் பல கைதிகள் சித்திரைவதைக்கு உள்ளக்கப்பட்டுவருக்கின்றனா் இதன் எடுத்து காட்டே கோபிதாஸ் மரணமும் நிகழ்ந்துள்ளது. இந்த அரசாங்கம் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கோபிதாஸ் போன்று பல அரசியல் கைதிகள் தொடா்ந்தும் மா்மான முறையில் மரணமடையா நோிடும். 
எஸ்.செல்வதீபன்

