Headlines News :
Home » , , , » உலகின் மிகப்பெரும் சைபர் அட்டாக்….125 கோடி பேரின் அக்கவுன்ட் காலி

உலகின் மிகப்பெரும் சைபர் அட்டாக்….125 கோடி பேரின் அக்கவுன்ட் காலி

இன்றைக்கு நம்முடைய பல முக்கிய தகவல்கள், பேங்க் விவரங்கள், மற்றும் பல தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் நமது இ மெயிலில் தான் வைத்திருப்போம்.அப்படி வைத்திருப்பவர்களுக்கு தற்போது ஒரு பகீர் செய்தி அது
என்னவென்றால் நேற்று இரவு நடந்த சைபர் அட்டாக்கில் உலகம் முழுவதிலும் இருந்து 125 கோடி நபர்களின் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டிருக்கிறது.கூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ இப்படி பல பெரிய நிறுவனங்களின் மேல் தான் ஹேக்கர்கள் இந்த அட்டாக்கை நடத்தி உள்ளனர்.இந்த மேட்டரே இன்று தான் கூகுளுக்கு தெரியும் இது குறித்து இப்போது தான் கணக்கு எடுத்து கொண்டிருக்கிறது கூகுள் எத்தனை பேரின் மெயில்கள் ஹேக் செய்யப்பட்டது
இதனால் உலகம் எங்கும் இருக்கும் பெரு நிறுவனங்கள் தனது வங்கி மற்றும் முக்கிய இணையம் சார்ந்த பரிவர்தனைகளின் பாஸ்வேர்டுகளை தற்போது வேகமாக மாற்றி வருகின்றது.
அட போங்க பாஸ் என் அக்கவுன்ட்ல ஒன்னுமே இல்லை நானே ஒரு வெட்டி பய என்கிட்ட இருக்கற மெயிலில் இருந்து அவன் என்னத்த திருடபோறான் அப்படின்னு நீங்க கேக்க வர்றது எனக்கு புரியுதுங்க.
அதாவது இந்த டேட்டா எல்லாத்தையும் ஹேக்கர்ஸே வெச்சுக்க மாட்டாங்க இந்த தகவல்கள் அனைத்தையும் கருப்பு சந்தைகளில் விற்று செமயா காசு பாத்திருவாங்க.
இத வாங்குற அந்த புண்ணியவான்கள் தான் உங்களுக்கு Spam மெயில்களை அனுப்புறது லோன் வாங்கிகோங்க, அது இதுன்னு உங்க மெயிலுக்கு தொடர்ச்சியா அனுப்பிட்டே இருப்பாங்க அவுங்க, இது தாங்க மேட்டரு.இதுவரை உலகில் நடந்துள்ள சைபர் அட்டாக்கிலே இதுதான் மிகவும் பெரியது ஆகும் எதுக்கும் உங்க அக்கவுன்ட்ட கொஞ்சம் பாத்துகோங்க பாஸ்.

Share this article :

Banner Ads

Friends Site