Headlines News :
Home » » சிங்கள புலனாய்வுப் பிரிவால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கர்பிணிப் பெண் இவர்தான் !

சிங்கள புலனாய்வுப் பிரிவால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கர்பிணிப் பெண் இவர்தான் !

தனது கணவர் காணமல் போயுள்ளார் என்று முறையிட்ட காரணத்தால், மனைவியின் வீட்டிற்குச் சென்ற சிங்கள புலனாய்வுப் பிரிவினர் கர்பிணிப் பெண் என்றுகூடப் பாராமல் தர்மிளாவை அடித்து இழுத்துச் சென்றுள்ளார்கள். இச் சம்பவம் கடந்த 11ம் திகதி திருகோணமலை உப்புவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மீடியாக்களில் செய்திகள் சில வெளியாகி இருந்தது. இருப்பினும் எமக்கு மேலதிகத் தகவல்கள் தற்போது இதுதொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது. 26 வயதாகும் மற்றும் 7 மாதக் கற்பிணியாக இருக்கும் தர்மிளாவின் கணவர் காணமல்போயுள்ளார். இதனை இவர் முறைப்பாடுசெய்துள்ளார். பொலிசாரும் சிங்கள புலனாய்வுப் பிரிவினருமாக இணைந்து இவரது வீட்டிற்குச் சென்று, கர்பிணி என்று கூடப் பாராமல் அவரை தாக்கியுள்ளார்கள். பின்னர் கொழும்பில் உள்ள 4ம் மாடிக்கு கொண்டுசென்றுள்ளார்கள். தடுத்துவைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க, குறித்த இந்தப் பெண்ணின் வீட்டுக்கு முன்னதாக புலனாய்வுப் பிரிவினர் CCTV கமரா ஒன்றையும் இரகசியமாகப் பொருத்தியுள்ளார்கள் என்ற செய்தியும், அவ்வூர் மக்களூடாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இவர்களது உறவினர் வீடு யாழ் ஏழாலையில் இருக்கிறது. அங்கும் புலனாய்வுப் பிரிவினர் சென்று நோட்டமிட்டு வருகிறார்கள். அதாவது இலங்கையில் இனி எவராவது காணமல்போனால், மனித உரிமை கழகத்திலும் சரி, பொலிஸ் நிலையத்திலும் சரி, எங்கும் சென்று முறையிடவேண்டாம் என்று நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள், சிங்கள புலனாய்வுப் பிரிவினர். மீறி முறைப்பாடு செய்தால் இப்பெண் தர்மிலாவை தாம் கையாண்டது போலவே உங்களையும் கையாள்வோம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இவர்கள். இந்த நாட்டில் எப்போது மனித உரிமை மேம்படப்போகிறது ? ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் கூட, சிங்கள இராணுவம் இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடுகிறது. இதில் இருந்து நமக்கு புலப்படுவது என்னவென்றால், இந்த அமெரிக்க பூச்சாண்டிக்கு எல்லாம் மகிந்தர் அடிபணியப்போவது இல்லை என்பது தான்.
Share this article :

Banner Ads

Friends Site