Headlines News :
Home » , » மாயமான விமானத்தின் சாட்டிலைட் படத்தை கண்டுபிடித்த ஹைதராபாத் சாப்ட்வேர் என்ஜினியர்

மாயமான விமானத்தின் சாட்டிலைட் படத்தை கண்டுபிடித்த ஹைதராபாத் சாப்ட்வேர் என்ஜினியர்

மாயமான மலேசிய விமானம் மார்ச் 8ம் தேதி அந்தமான் தீவுகளில் மிகவும் தாழ்வாக பறந்தபோது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக இருப்பவர் அனூப் மாதவ் எஜ்ஜினா(29). அவர் தனது அலுவலகத்தில் மாயாமான மலேசிய விமானம் பற்றி ஏதாவது தகவல் கிடைக்காதா என்று டிஜிட்டல் குளோப் செயற்கைக்கோள் க்யூபி02வின் படங்களை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கடந்த 8ம் தேதி அந்தமான் தீவுகளில் மிகவும் தாழ்வாக பறந்த விமானத்தின் புகைப்படத்தை பார்த்தார். அது மாயமான மலேசிய விமானத்தின் படமாக இருக்கும் என்று அவர் கருதினார். உடனே அந்த படத்தை பிரபல சி.என்.என். செய்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும், 2012ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Banner Ads

Friends Site