Headlines News :
Home » , » இளவட்டங்களை திக்குமுக்காட வைக்கும் ஹன்சிகா!

இளவட்டங்களை திக்குமுக்காட வைக்கும் ஹன்சிகா!

சினிமாவில் நடிக்கும்போது மட்டுமே இயக்குனர்கள் சொல்லும் உடைகளை அணிந்து நடிக்கும் ஹன்சிகா மற்ற நேரங்களில் தனக்கு என்ன பிடிக்கிறதோ அந்த மாதிரியான உடைகளைத்தான் அணிவார். டிரஸ் விசயத்தில் அவரது அம்மாவோ, அண்ணனோ தலையிட்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காதாம். என் விருப்பத்தில் யாரும் தலையிடாதீர்கள் என்று கத்தி விடுவாராம். அதனால் டிரஸ் விசயத்தை பொறுத்தவரை ஹன்சிகாவின் வீட்டு உறுப்பினர்கள் யாருமே அவர் விருப்பத்துக்கு மாறாக பேசுவதில்லையாம்.

ஆனால், சில மாதங்களாக காதலில் விழுந்திருந்த ஹன்சிகா, தனது காதலரான சிம்பு என்ன சொல்கிறாரோ அதே மாதிரியான டிரஸ்களைத்தான் அணிந்து வந்தாராம். தினமும் காலையில் சுப்ரபாதம் பாட்டு ஒலிப்பது போன்று சிம்பு மொபைலில் தொடர்பு கொண்டு இன்றைக்கு இந்த மாதிரி டிரஸ் அணிந்து செல் என்பாராம். அல்லது இந்த கலரில் டிரஸ் அணிந்து வா என்று தான் இருக்குமிடத்திற்கு அழைப்பாராம். அதையடுத்து ஆசை ஆசையாய் அவரது டேஸ்டுக்கு டிரஸ் அணிந்து கொண்டு குஷியோடு ஓடுவாராம் ஹன்சிகா. ஆனால் அப்படி அவர் சொல்லும் அனைத்து டிரஸ்களும் அவரது உடம்பை புல்லும் கவர் பண்ணும் ஆடைகளாகத்தான் இருக்குமாம்.

ஆனால், இப்போது சிம்புவின் காதலுக்கு கல்தா கொடுக்கப்பட்டு விட்டதால், மீண்டும் தனது பேவரிட் டிரஸ்களை அணிந்து கொண்டு திரியும் ஹன்சிகா, படு கவர்ச்சியாக ஸ்பாட்டுகளுககு விசிட் அடிக்கிறார். குறிப்பாக, இளவட்டங்கள் அவர் எதிரில் நின்று பேசவே திக்குமுக்காடிப்போகிறார்கள். அந்த அளவுக்கு கிளாமர் உடை தரித்து வந்து திணறடிக்கிறார். இதனால் படப்பிடிப்பு தளங்களில் ஹன்சிகாவுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Share this article :

Banner Ads

Friends Site