Headlines News :
Home » » யாழில் ஆளில்லாமல் உளவு பார்க்கும் சிறிய விமானம்!

யாழில் ஆளில்லாமல் உளவு பார்க்கும் சிறிய விமானம்!

யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேற்பகுதியில் இருந்து ஆள் இல்லாமல் உளவு பார்க்கும் புகைப்படக் கருவியுடன் கூடிய சிறிய விமானத்தை பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நகரப் பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் மேற்பகுதியில் குறித்த விமானம் இருப்பதனை விடுதியின் ஊழியர் அவதானித்துள்ளார்.
பின்னர் அவ்விடயம் தொடர்பாக விடுதியின் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் குறித்த விமானம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட விமானம் தற்பொழுது யாழ். பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் யாழ்.பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. எனினும் குறித்த விமானம் சிறியது எனவும் அதில் சிறிய புகைப்படம் எடுக்கும் கருவி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விமானம் உளவு பார்க்கும் நோக்கில் செலுத்தப்பட்டு இயந்திரக் கோளாறினால் பழுதடைந்து வீழ்ந்துள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டு வருவதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

Banner Ads

Friends Site