விஜய் படத்தில் பவர்ஸ்டார் நடித்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது கூடிய விரைவில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
நேற்று விஜய்யின் பிறந்தநாள். சக நடிகர்கள் - நடிகைகள் உள்ளிட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பவஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் விரைவில் நாம் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார் பவர்ஸ்டார்.
இதனால், விஜய் படத்தில் பவர்ஸ்டார் நடிகக் வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. பவர்ஸ்டார், விஜய்யுடன் நடிக்க விரும்பியே இத்தகவலை ட்விட் செய்துள்ளார்.


