Headlines News :
Home » » சுரேஷ் எம்.பி. மீது அரச அடியாட்கள் மற்றும் பொலிஸார் தாக்குதல் முயற்சி!

சுரேஷ் எம்.பி. மீது அரச அடியாட்கள் மற்றும் பொலிஸார் தாக்குதல் முயற்சி!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் முல்லைத்தீவில் இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராடத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாரும் வேறு சிலரும் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
(05.06.2014) காலை 9 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து பெருமளவு மக்கள் படையினரால் பேருந்துகளில் ஒழுங்கமைத்து ஏற்றிவரப்பட்டிருந்தனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் போராட்டத்தை குழப்ப முற்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை அவதூறாகப் பேசியதுடன் பெரும் கூச்சலுமிட்டனர்.

இதன்போது அவ்விடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குழப்பக்காரர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், முதியவர் ஒருவர் சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தாக்க முற்பட்டபோது பொலிஸார் முதியவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் மற்றுமொரு பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனை தோளில் கை வைத்து தள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது அந்த பொலிஸார் தனது தொப்பியையும் துப்பாக்கியையும் அருகில் நின்ற மற்றொரு பொலிஸாரிடம் கொடுத்துவிட்டு சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தாக்க முற்பட்டுள்ளார். எனினும் அதற்குள் அங்கிருந்த ஏனைய பொலிஸார் மற்றும் நாடளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர் ஆகியோர் அதனைத் தடுத்து நிறுத்தினர்.

Share this article :

Banner Ads

Friends Site