Headlines News :
Home » , » தமிழீழத் தாயகத்தில் போரினால் கணவனை இழந்த 90 ஆயிரம் பெண்கள் !

தமிழீழத் தாயகத்தில் போரினால் கணவனை இழந்த 90 ஆயிரம் பெண்கள் !

இலங்கைத்தீவில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், அங்கு கணவனை இழந்த 90,000க்கு மேற்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது அனைத்துலக விதவைகள் நாளில் அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருகின்றதென தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தனது அறிக்கையில்.

தெரிவித்துள்ளார்.இன்றய சமுதாயத்தில் கணவனை இழந்த பெண்கள் ஆற்றிவரும் பங்குபற்றி சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்து இன்றய நாளை அவர்களின் பெயரால் பிரகடனப்படுத்தியிருப்பது மிகவும் பொருத்தகானதாகும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் பாலாம்பிகை முரகதாஸ் அவர்கள் குறிப்பாக யுத்தப்பாதிப்புக்குள்ளான நாடுகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் விதவைப் பெண்களின் வகிபாகம்இ அவர்களின் பங்களிப்பு என்பன தற்கால சமூக இயக்கத்திற்கு வலுச்சேர்க்கின்றன குறித்துரைத்துள்ளார்.மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :சிறிலங்கா அரசாங்கம் தனது சிங்கள ராணுவத்தைக்கொண்டு தமிழர் தாயகத்தை ராணுவ நிர்வாகத்தின் கீழ் அடக்கியும், தமிழர்தாயகத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை சிறிலங்கா ராணுவம் சட்டத்திற்கு முரணாக தங்குதடையின்றி அபகரித்தும் வருகிறது. 
விவசாயம், மீன்பிடி, வாணிபம் மீதான பாரபட்சமான ராணுவக் கட்டுப்பாடுகளினால், கைம்பெண் குடும்பங்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாகின்றனர். விசாரணையென்ற பெயரில் பொலிசாரால் அல்லது ராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்;ட தமது உறவினர்களை விடுவிப்பதற்காக குரல் கொடுக்கும் குடும்ப தலைவிகள் படையினரின் கொலைப்பயமுறுத்தல் அல்லது கடத்திச்சென்று சிறையிலடைத்தல் கெடுபிடிகளுக்கு ஆளாகிறார்கள். வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு அரச ஆதரவுடன் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றம் செய்கிறார்கள்.
சிறிலங்காவில் யுத்தத்தின் விளைவாக சுமார் 90,000 தமிழ் கைம்பெண்கள் வாழ்கிறார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்துப்படி ராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாலியல. வன்புணர்ச்சி , பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
இக்குற்றச் செயல்களுக்கு சிங்கள ராணுவத்தினரே பொறுப்பு என ‘மனித உரிமைகள் காப்பகம்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’ ஆகிய நிறுவனங்கள் 2013ம் ஆண்டு அறிக்கையிட்டுள்ளன. ஆய்வாளர்கள், கல்விமான்கள் பலர் யுத்த கைம்பெண்களிடமிருந்து பெற்றுக்கொண்ட இரகசிய வாக்குமூலங்களின் அடிப்படையில், கைம்பெண்கள்மீது இழைக்கப்படும் தான்தோன்றித்தனமான பாலியல் துஷ்பிரயோகங்களிற்கு ராணுவத்தினரே பொறுப்பாளிகள். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளுள் பெண்களின் எலும்புக்கூடுகள் எரியூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளன. இவை தொடர்பான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வழக்குகள் முன்னெடுக்கப்படவில்லை.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 2009ம் ஆண்டு மேமாதப் பகுதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் ராணுவத்தினரால் தமது கணவன்மாih மனைவிமார் முன்னிலையில் கடத்திச் செல்லப்பட்டிருந்தும். அவர்களின் விடுதலைக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தம்மாலான உள்ளூர் வழிமுறைகளையெல்லாம் மேற்கொண்டும் பலனில்லை. ஆரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தும் ஏதும் நடைபெறவில்லை. சர்வதேசத்திடம் முறையிட்டு நீதிகேட்டு தமது கணவன்மாரை கண்டுபிடித்துத் தருமாறு எதிர்பார்க்கின்றனர்.
‘ஐக்கிய நாடுகள் சபை’ யின் வல்லுனர் குழுவின் ஆதரவுடன் ‘ஸ்ரீலங்கா பிரச்சாரக் குழு’ சமீபத்தில் அறிக்கையொன்றை தயாரித்திருந்தது. புல முக்கிய விடயங்களை அது வெளிக்கொணர்கிறது.
1) யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களைக் கடந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தண்டனைப் பயமின்றி தொடர்கிறது.
2) தமிழர் வாழ் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
3) தமிழ் பெண்கள் வலுக்கட்டாயமாக சிங்கள ராணுவத்தில் இணைக்கப்படுகின்றனர்.
4) தமிழ் சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ் குடும்ப பெண்கள் கட்டாய  கருக்கலைப்புக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
 தமது பாதுகாப்பிற்கு அச்சம் நிலவுகிறது என உணரும்போது உரிய பாதுகாப்புக்கொடுக்கவும், பல்லாயிரக்கணக்கான விதவைகளின் காப்பரணாக செயற்படவும் ‘பாதுகாப்புப் பொறிமுறை’ ஒன்றை உடனடியாக உருவாக்கி செயற்படவைக்க ஆவன செய்யுமாறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச விதவைகள் தினமான இன்று அனைத்துலக சமூகத்தின் முன் வேண்டிநிற்கின்றது என  தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site