Headlines News :
Home » , » இலங்கையின் தடைப்பட்டியலை அமெரிக்கா நிராகரிப்பு..

இலங்கையின் தடைப்பட்டியலை அமெரிக்கா நிராகரிப்பு..

புலம்பெயர் தமிழர்களிடம் புலிகள் தொடர்ந்தும் நிதி திரட்டி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில் அறிவித்த போதிலும், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பட்டியலை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கவில்லை. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், தடையை அமுல்படுத்தப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், இந்த தடையை தமது நாட்டில் அமுல்படுத்தப் போவதில்லை என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தலமையிலான கனேடிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இதே நிலைப்பாட்டை தற்போது அமெரிக்காவும் வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர் அமைப்பு தடையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site