இதனை விடுத்து அச்சுறுத்தும் வகையில் இனந் தெரியாதவர்கள் என்ற போர்வையில் நடந்து கொள்வது வேதனையானதும் வெறுக்கத்தக்க விடயமுமென அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரத்தினை எதிர்த்து போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இவ்வாறான அச்சுறுத்தல்கள் காரணமாக ஏற்கனவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த பல பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்கள்.
இத்தகைய ஒரு நிலைமையை மீண்டும் உருவாக்கி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை நாட்டைவிட்டு விரட்டி பல்கலைக்கழகத்தை மூடச்செய்வதே இத்தகையவர்களின் நோக்கமென நாம் நினைக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



