Headlines News :
Home » » முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை தொடர்புபடுத்தி இலங்கையில் வழக்கு?

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை தொடர்புபடுத்தி இலங்கையில் வழக்கு?

முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராயை தொடர்புபடுத்தி கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயுடன் காதல் உறவு கொண்டிருந்தேன், அவர் இந்திய நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் தம்மை ஏமாற்றியதாகவும், அது தொடர்பில் சட்ட ரீதியான உதவி வழங்குவதாகத் தெரிவித்து தமது மருமகன் 17 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக நபர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தாய்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட நிரோசன தேவப்பிரிய என்பவர் இலங்கையில் வாழ்ந்து வரும் தமது மருமகனுக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா தம்மை ஏமாற்றியதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்கு நட்ட ஈடு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பாணந்துறையைச் சேர்ந்த ரோசான் அஜித் என்பவர் 17 லட்ச ரூபா பணம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், சட்ட ரீதியாக எவ்வித நடவடிக்கையும் குறித்த நபர் எடுக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சந்தேக நபரான அஜித் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தனது மாமாவிற்கு பணத்தை தவணை அடிப்படையில் செலுத்துவதாக நீதிமன்றில் ஒப்புக் கொண்டதனைத் தொடர்ந்து அஜித்தை, நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை செய்துள்ளார்.
Share this article :

Banner Ads

Friends Site