தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஒரு மாவீரன் என்றும் அவரைப்போன்ற ஒருவர் மீண்டும் பிறக்கப்போவதில்லை எனவும் கேணல்.ஹரிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிப்படைத் தளபதியாக ஈழத்தில் கடமையாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள கேணல்.ஹரிகரன் அவர்கள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையில் சிறந்த மாவீரன். அவரால்தான் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இவ்வளவிற்கு வந்துள்ளது. பிரபாகரனைப் போன்று மீண்டுமொருவர் தமிழர்களிடத்தில் பிறக்கப்போவதில்லை எனவும் பகிரங்கமாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தின் மூத்த தளபதியான கேணல்.ஹரிகரன் இவ்வாறு தலைவரின் வீரத்தை வெளிப்படையாக பாராட்டியுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


