யுக்ரைனின் இரு ஹெலிகொப்டர்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.
யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் மீது யுக்ரைனிய படையினர் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதன்போதே கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இரு ஹெலிகொப்டர்களையும் இரு படையினரையும் யுக்ரைன் இழந்துள்ளது.இதேவேளை தனது சொந்த மக்கள் மீதே யுக்ரைன் தாக்குதல் நடத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. 


