Headlines News :
Home » » முள்ளியவளையில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

முள்ளியவளையில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

முள்ளியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 28ம் திகதி முதல் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளியவளை 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி ஜெயன்( வயது 37) என்பவரே காணாமற்போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் தனது பிள்ளையையும், அவருக்கு உதவியாக இருக்கும் மனைவியையும் கடந்த 28 ம் திகதி பார்வையிட்டுவிட்டு அன்று மதியம் 1 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து திரும்பிய அவர் காணாமற்போயுள்ளார் என அவரது உறவினர்களால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  முள்ளியவளை பொலிஸார் குறிப்பிட்டனர்.
Share this article :

Banner Ads

Friends Site