நடிகர் சிம்பு காதலிப்பது என்பது ஒன்றும்  புதிதல்ல, ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவில் தொடங்கி ஹன்சிகா வரை காதல்  புரிந்தார். இவர் அவ்வபோது யாரையாவது காதலிக்கிறேன் என்று கூறி பரபரப்பை  கிளப்பிவந்தார். நயன்தாராவும் சிம்புவும் உருகி.. உருகி… காதலித்து பின்  கண்ணீருடன் பிரிந்தனர். அதன் பின் சிம்பு ஹன்சிகாவையும், நயன்தாரா  பிரபுதேவாவையும் காதலித்தனர். இந்த ஜோடிகளின் காதலும் சிக்கிரமே முறிந்து  விட்டது.
இந்த  நிலையில் நடிகை த்ரிஷாவின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட சிம்பு  நயன்தாராவுடன் கட்டிபிடித்தபடி புகைப்படம் வெளியானது. இதனால் இவர்கள்  மீண்டும் காதலில் விழுந்து விட்டதாக கிசுகிசுக்கபட்டது. இந்த நிலையில்  சிம்பு, நயன்தாராவை கல்யாணம் செய்து கொள்ளபோவதாக முடிவு செய்துள்ளதாகவும்,  இதுகுறித்து வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்த நபர்  யார்? என தற்பொழுது கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து விளக்கம் கேட்க  இது நம்ம ஆளுக்கு போன் போட்ட போன் சுவிட்ச் ஆப். இயக்குனர் எஸ்கேப்.


