Headlines News :
Home » » இணைய தளங்கள் முடக்கத்தை அவதானிக்கிறதாம் மனித உரிமை ஆணைக்குழு…

இணைய தளங்கள் முடக்கத்தை அவதானிக்கிறதாம் மனித உரிமை ஆணைக்குழு…

இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் சில இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில்ழ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
1978ம் ஆண்டின் அரசியல் சாசனத்தின் 14ம் இலக்க சரத்தின் அடிப்படையில் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். பிரசூர சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,
எவ்வாறெனினம் தேசிய நலன்கள் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 14ம் சரத்தில் சில வரையறைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் 11ம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையைப் போன்று கருத்துச் சுதந்திரத்தில் முழு அளவிலான சுதந்திரம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எட்டு செய்தி இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

Banner Ads

Friends Site