Headlines News :
Home » » கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி

கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி

அவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்குப் படகுகளில் அகதிகள் செல்வதைத் தடுப்பது தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்கான சிறிலங்கா சென்ற அவர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளையும் பார்வையிட்டுள்ளார்.
கடந்த 7ம் நாள், திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குச் சென்ற றியர் அட்மிரல் மிச்சேலர் நூனன், தருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், கடற்படைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ள கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளையும், போர்ப்படகுகளையும் பார்வையிட்டுள்ளார்.
திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளைத் தவறாமல் பார்வையிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே சீன பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரும் அவற்றைப் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this article :

Banner Ads

Friends Site