கனடாவின்  கிழக்கு கடற்கரையிலுள்ள நியூபவுண்ட்லான்டில் நீல திமிங்கிலமொன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. 
28 யார் நீளமான இந்த திமிங்கிலத்தின்  உடல் அழுகி உருக்குழைந்து வீங்கியுள்ளதால் அது எப்போதும் வெடித்து பெருமளவு மெதேன் வாயு வெளியேறலாம் என பிரதேசவாசிகள்  கவலை  அடைந்துள்ளனர். 
அத்துடன் மேற்படி 60 தொன் நிறையுடைய அழுகிய திமிங்கிலம் வெடிக்கும் போது அதன் உடலிலுள்ள மனித நலனுக்கு தீங்கு  விளைவிக்கும் பற்றீரியா நகரமெங்கும் பரவலாகம்  என்ற அச்சமும் தோன்றியுள்ளது. 



