Headlines News :
Home » » 1 மணிநேரம் மூடப்பட்ட வெள்ளை மாளிகை

1 மணிநேரம் மூடப்பட்ட வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் வந்த காரை மர்ம கார் பின் தொடர்ந்து வந்ததால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் மால்யா மற்றும் ஷாஷா நேற்று மாலை 4.40 மணி அளவில் வெள்ளை மாளிக்கைக்கு வந்த காரை மர்ம கார் ஒன்று பின் தொடர்ந்து வந்தது. அப்போது ஒபாமா வெள்ளை மாளிகையில் வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரியுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். ஒபாமா மகள்களின் கார் வெள்ளை மாளிக்கைக்குள் சென்றதும் அந்த காரை பின் தொடர்ந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அந்த கார் டிரைவரான மேத்யூ இவான் கோல்ட்ஸ்டெய்ன்(55) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணிநேரம் வெள்ளை மாளிகை மூடப்பட்டது. கைதான மேத்யூ வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும் அவர் வெள்ளை மாளிகை அருகே உள்ள கருவூல கட்டிடத்தை கடந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this article :

Banner Ads

Friends Site