Headlines News :
Home » » தென்மராட்சி மிருசுவில் பகுதியில் மனித எச்சங்கள்! மனித புதைகுழி என மக்கள் அச்சம்!

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் மனித எச்சங்கள்! மனித புதைகுழி என மக்கள் அச்சம்!

இராணுவ கட்டுப்பாட்டில் 18வருடங்களாக இருந்துவந்த மிருசுவில் கெற்பேலியில் மனித எச்சங்கள் பல சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட்ட கெற்பேலி கடற்கரைப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தங்கள் காணிகளை உரிமையாளர்கள் இன்று துப்புரவு செய்த போது அங்கிருந்த மண் அணைக்கு (பண்ட்) அண்மித்த பகுதியில் சிதைந்த நிலையில் மனித எச்சங்கள் இருப்பதை கண்ணுற்றுள்ளனர்.
அத்தோடு மனித உடலங்கள் எரியூட்டப்பட்ட அடையாளங்களும் தென்பட்டதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிஸ் மற்றும் பிரதேச செயலகத்திற்கும் காணி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பிரதேச செயலக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்து வருகின்றனர்.
Share this article :

Banner Ads

Friends Site