Headlines News :
Home » » புலனாய்வு அதிகாரிகள் மீது தாக்குதல்

புலனாய்வு அதிகாரிகள் மீது தாக்குதல்

சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்காக மஹரகம நகரத்திற்கு சென்றிருந்த புலனாய்வு பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிற்நுட்பவியலாளர் மற்றும் வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவரையே சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த அதிகாரிகள் தங்களுடைய அடையாளத்தை உறுதிபடுத்தியதன் பின்னரே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

Banner Ads

Friends Site