இலங்கை  போர்க்குற்றம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட  வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம்  இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இலங்கையில்  நடந்த போர்க்குற்றம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை  நடத்தவும், இலங்கை போரில் இந்திய இராணுவத்தின் பங்கு குறித்து விசாரிக்க  கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்டத்தரணி  ராம்சங்கரின் பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை  நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டனர்.


