Headlines News :
Home » » வடக்கில் ஊடகவியலாளர் மீதான கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். – வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்

வடக்கில் ஊடகவியலாளர் மீதான கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். – வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்


தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கும் நோக்கில் கோழைத் தனமாக யாழ். பிரதேச ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது நடத்தபட்ட தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி புது வருட தினத்தில் மைக்கல் விளையாட்டு கழகத்தின் தலைவரும் வடமராட்சியின் ஊடகவியலாளரும் எனது நண்பனுமான சிவஞானம் செல்வதீபன் இனம் தெரியாத கடையர்களால் இரவு 8 மணியளவில் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக கடுமையாக தக்கபட்டுள்ளார். இத் தாக்குதலை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் .
இவர் வடமராட்சியில் இடம்பெறும் அனைத்து விதமான செய்திகளையும் மிகவும் துணிவுடன் வெளியிட்டு வந்தார் என்பது குறிபிடத்தக்கது. கடந்த காலங்களில் இவ் பேரினவாத அரசனது எங்களது இளைய சமுதாயத்தினை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.
ஆயுத போராட்டம் தோற்கடிக்க பட்ட நிலையில் ஜனநாயக முறையில் எங்களது உரிமைகளை பெற்று அமைதியான வாழ்க்கையினை வாழத்துடிக்கும் எமது சமுதாயத்தை சீண்டிப் பார்க்கும் செயற்பாட்டினை அரசாங்கம் திட்டமிட்டு நடாத்தி வருகின்றது அனைவரும் அறிந்த உண்மை. இவ் நிலைமையானது மறந்து இருக்கும் எமது பழைய நினைவுகளை துசு தட்டுவதற்கு சமனாகும்.
ஆகவே எம் மீது பிரயோகிக்கபடும் அடக்கு முறைகளை நிறுத்தி பிறந்திருக்கும் புத்தண்டிலாவது எமது இளைய சமுதாயம் அச்சமற்ற சுழலில் வாழ்வதற்கான சூழ்நிலையினை இவ் அரசனது உருவாக்கி தரவேண்டும் என கேட்கின்றேன் என்றார்
Share this article :

Banner Ads

Friends Site