Headlines News :
Home » » யாழில் மஹிந்த பதாகை எரிப்பு

யாழில் மஹிந்த பதாகை எரிப்பு

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகை, இனந்தெரியாத நபர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு எரியூட்டப்பட்டுள்ளது. 

அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பதாகைகளில் 12 அடி உயரமான ஒரு பதாகையே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவ்விடத்திற்கு இன்று (28) அதிகாலை சென்றுள்ள இராணுவத்தினர், எரியூட்டப்பட்ட பதாகையினை அகற்றிச் சென்றுள்ளனர். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்.சாள்ஸ் மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் பதாகைகளும் இவ்வாறு எரியூட்டப்பட்ட நிலையில் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டன. 

ஜனாதிபதி, யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த தருணங்களில் அவரை வரவேற்கும் முகமாக மேற்படி பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :

Banner Ads

Friends Site