Headlines News :
Home » » கிளிநொச்சியில் கிளைமோர்

கிளிநொச்சியில் கிளைமோர்

கிளிநொச்சியில் ரயில் பாதைக்கு அண்மையாகவுள்ள கிணறு ஒன்றிலிருந்து கிளைமோர் குண்டொன்று இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிணற்றினை துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்ட போது, கிணற்றினுள் குண்டு இருப்பதினை அவதானித்த துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிற்குத் தகவல் வழங்கினார்கள்.

தொடர்ந்து இராணுவத்தினருடன் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் குண்டினை மீட்டுள்ளனர். அத்துடன், குறித்த கிணற்றின் சுத்திகரிப்புப் பணியினை நிறுத்தும் படியும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Share this article :

Banner Ads

Friends Site