மலேசிய விமானம் MH370 காணாமல் போன மார்ச் 8ஆம் தேதியில் இருந்தே பலவித  சந்தேகங்கள் அந்த விமானத்தை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கடலில்  விழுந்து விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டதாக மலேசிய அரசு அதிகாரபூர்வமாக  அறிவித்திருந்தாலும், பல வல்லுனர்கள் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க  வாய்ப்பில்லை என்று அடித்து கூறினர். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு  திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது. அதுதான் மலேசிய விமானத்தை அமெரிக்க  ராணுவம் கடத்தி ரகசிய இடத்தில் வைத்துள்ளது என்ற செய்தி.
Cadet Abdulla Rohe என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்க்கண்ட  அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதில் மலேசியா சீனாவுக்கு ரகசியமாக bio  weapon என்ற பயங்கர ஆயுதங்களை அனுப்ப இருப்பதாக வந்த தகவலை அடுத்து உஷாரான  அமெரிக்க ராணுவம், அந்த ஆயுதங்கள் அனுப்பப்படும் விமானத்தை கடத்த  திட்டமிட்டது. அந்த விமானத்தை ஓட்டும் பைலட்டுக்கு பணம் கொடுத்தோ அல்லது  மிரட்டியோ அந்த விமானத்தை திசைதிருப்ப உத்தரவிட்டுள்ளது.
அனைத்து நாடுகளின் சாட்டிலைட் தகவலின்படி விமானம் காணாமல் போனதில்  இருந்து ஐந்து மணி நேரம் பறந்துள்ளது. எனவே அந்த விமானம் ஐந்து மணிநேரம்  அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. மேலும் அந்த  விமானத்தின் தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விமானத்தை இந்திய  பெருங்கடலில் உள்ள  Diego Garcia என்ற தீவில் அமெரிக்க ராணுவம்  இறக்கியுள்ளது. இந்த தீவில் அமெரிக்க ராணுவத்தின் முகாம் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. விமானத்தில் உள்ள ஆயுதங்கள் குறித்து சோதனை  நடந்துவருவதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும்  கூறப்படுகிறது. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் இருந்து ஒரு  மாதத்திற்கு கதிர்வீச்சு இருக்கும். அந்த கதிர்வீச்சை வைத்து விமானத்தின்  இருப்பிடத்தை கண்டுபிடிக்கலாம். ஆனால் அமெரிக்க ராணுவம்  கருப்புப்பெட்டியின் கதிர்வீச்சையும் நிறுத்தியுள்ளது.  மாலத்தீவில் உள்ள  ஒருசிலர் மிக தாழ்வாக ஒரு விமானம் பறந்ததை பார்த்தாக கூறியுள்ளனர்.  Diego  Garcia என்ற தீவும் மாலத்தீவு அருகில்தான் உள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தீவில் ரன்வே ஒரு கிலோ மீட்டர் மட்டுமெ இருக்கிறது. எனவே  MH370 விமானி ஒரு கிலோ மீட்டரில் விமானத்தை இறக்கும் பயிற்சியையும் கடந்த  சில நாட்களில் அவர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா இந்த  விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்ததற்கு காரணம், அந்த நாட்டிற்கு வரவேண்டிய  ஆயுதங்கள் காணவில்லை என்பதுதான் உண்மை. இந்த சந்தேகம் எழும்பியது முதல் உலக  நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இவ்வாறு சந்தேகங்களை Cadet Abdulla Rohe என்பவர் ஃபேஸ்புக்கில்  எழுப்பியுள்ளார். அமெரிக்க அரசும், ராணுவமும் இதுகுறித்து எவ்வித பதிலும்  அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சந்தேகங்களுக்கு விடை  தெரிந்தால் விமானம் உண்மையில் எங்கு உள்ளது என்பது தெரியவரும்.


