Headlines News :
Home » » இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்...

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்...

யாழ். தொண்டமனாறு கடல் நீரேரிக்கும் பாலத்திற்கும் இடையிலான பகுதியில் வியாழக்கிழமை (17) மாலையிலிருந்து மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக கரவெட்டி பிரதேச செயலர் க.சிவஸ்ரீ தெரிவித்தார்.


இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கும்  மீன்களை சிலர் வியாபாரத்திற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 


மீன்கள் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவது ஏன் என்று அறியமுடியவில்லை. இருப்பினும், அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பாடாதவாறு  மீன்களை அழிக்கும் நடவடிக்கைகளை வல்வெட்டித்துறை நகரசபை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். 

இவ்வாறு மீன்கள் இறந்தமை தொடர்பில் பரிசோதிக்கப்படுமெனவும் அவர் கூறினார். 
Share this article :

Banner Ads

Friends Site