Headlines News :
Home » , » இன்றைய தினம் லண்டனில் உலகத் தமிழர் இணைய மாநாடு நடைபெறுகிறது !

இன்றைய தினம் லண்டனில் உலகத் தமிழர் இணைய மாநாடு நடைபெறுகிறது !

இன்றைய தினம் மாலை லண்டனில் உலகத் தமிழர் மாநாடு நடைபெறவுள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 39 தமிழ் இணையங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்து செய்திகளை வெளியிடும் இணையங்கள் மற்றும் தமிழ் மொழியில் செய்திகளை வெளியிடும் இணையங்கள் என பல இணையங்கள் இணைந்து இம் மாநாட்டை நடத்துவதே சிறப்பு அம்சமாகும். இன்று மாலை முதலில் நடக்கும் கலந்துரையாடலில் சில தீர்மானங்களை எட்ட பல இணையத்தளங்கள் முனைப்பு காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "விடுதலைப் போராட்டத்தில் இணையங்களின் பங்கு என்ன" "தமிழ் இணையங்களின் எதிர்காலம்" "இணைந்து செயல்படுதால் ஏற்படும் நன்மை" எனப் பல முக்கியமான விடையங்கள் கலந்துரையாடப்பட்டு ஒரு பொது உடன்பாடு ஒன்று எட்டப்படவுள்ளது.

ஈழத்து செய்திகளை பிரசுரிக்கும் பல முன்னணி இணையத்தளங்கள் இம் மாநாட்டில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட உள்ளார்கள். இதேவேளை பிரித்தானியா , பிரான்ஸ் , நோர்வே ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், மற்றும் செயல்பாட்டாளர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அமெரிக்கா , கனடா, நோர்வே, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து பல இணையத்தள ஊடகவியலாளர்கள் லண்டன் வந்து இம் மாநாட்டில் கலந்துகொள்வதாக, மாநாட்டை ஏற்பாடு செய்யும் உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site