Headlines News :
Home » » சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

எட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு 9.30 மணியளவில் கரவனெல்ல கபுலுமுல்ல எனும் இடத்தில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டது.


எட்டியந்தோட்டை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக பெருந்தொகையான ஆயுதங்களோடு மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 15 வருடங்களாக ஆயுதங்களை உற்பத்தி செய்து சுற்றுவட்டாரத்தில் விநியோகம் செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் இடம்பெற்றுவந்த பல்வேறு குற்றச் செயல்களுக்கு இங்கு உற்பத்தியாகும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை சந்தேக நபரின் வாக்குமூலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து பல்வேறு ஆயுதங்களும் உற்பத்திப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share this article :

Banner Ads

Friends Site