Headlines News :
Home » » சிறிலங்கா புறக்கணிப்பு விழிப்பூட்டல் செய்திப்படங்கள் : படைப்பாளிகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !

சிறிலங்கா புறக்கணிப்பு விழிப்பூட்டல் செய்திப்படங்கள் : படைப்பாளிகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !

சிறிலங்காவினை புறக்கணிக்கும் தொனிப்பொருளிலான விழிப்பூட்டல் செய்திப்படங்களுக்கு, படைப்பாளிகளுக்கான பொது அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
அரசியல் , வர்த்தகம் , பொளாதாரம் , உல்லாசம் என பல்வேறு துறைகளில் ஒன்றினை மையமாக கொண்டு, சிறிலங்காவினை புறக்கணிப்போம் எனும் தொனிப்பொருளினை கொண்ட விழிப்பூட்டல் செய்திப்படங்களாக அமைய வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு செய்திப்படங்களும் அதிகளவு 3 நிமிடம் வரை அமைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, காட்சிப்பதிவுகளாகவோ அல்லது நவீனமுறை வடிவங்களிலோ இப்படங்கள் அமையலாம் என கோரப்பட்டுள்ளது..
எந்த மொழியிலும் இவ்விழிப்பூட்டல் படங்களை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 10ம் திகதிக்கு முன்னர் இவற்றினை அனுப்பி வைக்க வேண்டப்பட்டுள்ளதோடு தேர்வு செய்யப்படும் சிறந்த செய்திப்படங்களுக்கு தகுந்த ஊக்குவிப்புச் சன்மானமும் வழங்கப்பட
இருக்கின்றது.
இதுபற்றிய மேலதிக விபரங்களை நா.தமிழீழ அரசாங்கத்தின் செயலக மின்னஞ்சல் secretariat@tgte.org மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site